/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
/
பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
ADDED : மார் 14, 2025 11:28 PM

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் காலிறுதியில் லக்சயா சென் தோல்வியடைந்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், உலக தரவரிசையில் 15வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென், 'நம்பர்-6' வீரரான சீனாவின் ஷி பெங் லியுடன் மோதினார். முதல் செட்டை லக்சயா சென், 10-21 என இழந்தார்.
இரண்டாவது செட்டில் போராடிய போதும், 16-21 என கோட்டை விட்டார். முடிவில் லக்சயா சென் 10-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, சீனாவின் ஷெங் ஷூ லியு, நிங் டான் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 14-21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 10-21 என நழுவவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 14-21, 10-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.