sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: ரக் ஷித்தா வெற்றி

/

பாட்மின்டன்: ரக் ஷித்தா வெற்றி

பாட்மின்டன்: ரக் ஷித்தா வெற்றி

பாட்மின்டன்: ரக் ஷித்தா வெற்றி


ADDED : ஜூலை 30, 2025 10:39 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்காவ்: மக்காவ் நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், தென் கொரியாவின் ஜியோன் மோதினர். முதல் செட்டை 21-8 என எளிதாக கைப்பற்றிய லக்சயா, அடுத்த செட்டை 21-14 என வசப்படுத்தினார். முடிவில் லக்சயா 21-8, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 21-10, 21-11 என சீன தைபேவின் ஹூவாங்கை வென்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர் பிரனாய் ('நம்பர்-33'), 75வது இடத்திலுள்ள இந்தோனேஷியாவின் மார்செல்லியோவை சந்தித்தார். இதில் பிரனாய் 21-18, 15-21, 16-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீரர்கள் சதிஷ்குமார், கிரண் ஜார்ஜ், சுப்ரமணியன், கருணாகரன் முதல் சுற்றில் தோல்வியடைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரக் ஷித்தா, தாய்லாந்தின் பர்ன்பிச்சா மோதினர். முதல் செட்டை 18-21 என இழந்த ரக் ஷித்தா, அடுத்த இரு செட்டை 21-17, 22-20 என வசப்படுத்தினார். முடிவில் ரக் ஷித்தா 18-21, 21-17, 22-20 என போராடி வெற்றி பெற்றார்.

மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் உன்னதி, ஆகர்ஷி, அன்மோல், தஸ்னிம் மிர் தோல்வியடைந்தனர்.






      Dinamalar
      Follow us