உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 04, 2026 11:28 PM

அ நிறம் | அளவு
ஹென்ஜென்: லக்சம்பர்க்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மேஹனா ரெட்டி பங்கேற்றார். அரையிறுதியில் பிரான்சின் ரோசி ஆக்டவியாவை சந்தித்தார். இதில் மேஹனா, 21-18, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
அடுத்து நடந்த பைனலில் மேஹனா, பெட்ரா மேக்ஸ்நேரோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை மேஹனா 21-19 என வென்றார். அடுத்த செட்டை 13-21 என இழந்தார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 16-21 என நழுவவிட்டார். முடிவில் மேஹனா, 21-19, 13-21, 16-21 என தோற்று, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார்.
