/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
செய்னா நேவல் 'குட்-பை' * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
/
செய்னா நேவல் 'குட்-பை' * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
செய்னா நேவல் 'குட்-பை' * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
செய்னா நேவல் 'குட்-பை' * பாட்மின்டன் அரங்கில் இருந்து...
ADDED : ஜன 20, 2026 10:59 PM

புதுடில்லி: சர்வதேச பாட்மின்டனில் இருந்து ஓய்வு பெற்றார் செய்னா நேவல்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் 35. உலக சாம்பியன்ஷிப் அரங்கில் வெள்ளி (2015) வென்றார். கடந்த 2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்தார்.
2016 முதல் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டார். இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன்வெல்த்தில் தங்கம் கைப்பற்றினார். கடந்த 2024 முதல் காயம் அதிகரிக்க, சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
செய்னா கூறியது:
கடந்த இரு ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தி விட்டேன். மக்களும் 'செய்னா இனிமேல்' விளையாட மாட்டார் என்பதை மெல்ல உணரத் துவங்கினர்.
ஏனெனில், முழங்கால் குருத்து எலும்பு சிதைவு காரணமாக பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை. சர்வதேச அரங்கில் அசத்த, தினமும் 8 முதல் 9 மணி நேரம் பயிற்சி தேவை. என்னால் 2 மணி நேரம் கூட தொடர முடிவதில்லை. முழங்கால் வீங்கி விடுகிறது.
இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், பாட்மின்டனில் இருந்து விடை பெறுகிறேன். இந்த ஓய்வு முடிவை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கான நேரம் முடிந்து விட்டது, அவ்வளவு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் இந்தியர்
ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் செய்னா (2012, லண்டன், வெண்கலம்).
* காமன்வெல்த் விளையாட்டு, ஒற்றையரில் 2 தங்கம் (2010, 2018) வென்ற முதல் இந்தியர் என பெருமை பெற்றுள்ளார்.
* அர்ஜுனா (2009), பத்ம ஸ்ரீ (2010), கேல் ரத்னா (2009-10), பத்ம பூஷன் (2016) விருது பெற்றுள்ளார்.

