தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ பாட்மின்டன்: ஸ்ரீயான்ஷி 'சாம்பியன்'

பாட்மின்டன்: ஸ்ரீயான்ஷி 'சாம்பியன்'

பாட்மின்டன்: ஸ்ரீயான்ஷி 'சாம்பியன்'


ADDED : மே 11, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ சர்வதேச பாட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீயான்ஷி சாம்பியன் ஆனார்.

மெக்சிகோவில் சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் ஸ்ரீயான்ஷி பங்கேற்றார். அரையிறுதியில் ஸ்ரீயான்ஷி, 21-19, 21-12 என மலேசியாவின் எலா லினை வீழ்த்தினார்.

அடுத்து நடந்த பைனலில் ஸ்ரீயான்ஷி, பிரேசிலின் ஜூலியானா வியனாவை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்ரீயான்ஷி, 12-21 என கோட்டை விட்டார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை ஸ்ரீயான்ஷி, 21-16 என கைப்பற்றினார்.

மூன்றாவது, கடைசி செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீயான்ஷி, 21-18 என வசப்படுத்தினார்.

48 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ஸ்ரீயான்ஷி, 12-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், புருத்வி ஜோடி, கனடாவின் லாப் கன் கெர்ன், லாப் ஹாங் ஹியுகோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-18, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us