உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 16, 2026 11:09 PM

அ நிறம் | அளவு
பாவோஜி: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் ஸ்ரீயான்ஷி முன்னேறினார்.
சீனாவின் பாவோஜி சிட்டி நகரில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீயான்ஷி பங்கேற்றார். கடந்த வாரம் மெக்சிகோ நகரில் நடந்த தொடரில் சாம்பியன் ஆன ஸ்ரீயான்ஷி, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற வீராங்கனையாக களமிறங்கினார்.
இம்முறை அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் சீன வீராங்கனை ஜு வென் ஜிங்குடன் மோதினார். முதல் செட்டை ஸ்ரீயான்ஷி 21-13 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டையும் 21-17 என வசப்படுத்தினார். 37 நிமிடம் நடந்த முடிவில் ஸ்ரீயான்ஷி, 21-13, 21-17 என நேர் செட்டில் வென்று, பைனலுக்கு முன்னேறினார்.
