sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...

/

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...


ADDED : நவ 18, 2025 10:48 PM

Google News

ADDED : நவ 18, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தைவானின் லி-வெய் போ, கோ சி சங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட் துவக்கத்தில் இருந்து இழுபறியாக இருந்தது.

ஒரு கட்டத்தில் 22-22 என சமனில் இருந்தது. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 25-23 என செட்டை கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டை 21-16 என வசப்படுத்தியது. 48 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 25-23, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 10-21, 14-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் பேபிரியானா, மெய்லிஷா ஜோடியிடம் தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us