ADDED : அக் 08, 2025 10:52 PM

வன்ட்டா: பின்லாந்தின் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தான்யா, சீன தைபேவின் ஹுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை 22-20 என போராடி வென்றார் தான்யா. தொடர்ந்து அடுத்த செட்டையும் 21-18 என வசப்படுத்தினார். 45 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தான்யா, 22-20, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீன தைபேவின் லின் ஹி மோதினர். இதில் அன்மோல், 23-21, 11-21, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
லக்சயா 'ஷாக்'
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய முன்னணி வீரர் லக்சயா சென், ஜப்பானின் நரவோகாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 15-21, என இழந்த லக்சயா அடுத்த செட்டையும் 17-21 என நழுவவிட்டார். 57 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் லக்சயா 15-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் தருண், பிரான்சின் போபோவ் மோதினர். இதில் தருண் 11-21, 21-11, 22-20 என போராடி வெற்றி பெற்றார். இந்தியாவின் ஆதித்யா ஷெட்டி, 15-21, 16-21 என தாய்லாந்தின் விதித்சர்னிடம் தோல்வியடைந்தார்.