தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம் * வெளியேறியது இந்திய அணி

பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம் * வெளியேறியது இந்திய அணி

பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம் * வெளியேறியது இந்திய அணி


ADDED : ஏப் 28, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹோர்சென்ஸ்: உபர் கோப்பை பாட்மின்டனில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

டென்மார்க்கில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான உபர் கோப்பை 'ஏ' பிரிவில் இந்திய அணி, முதலில் டென்மார்க்கிடம் தோற்றது. அடுத்து உக்ரைனை வென்றது. கடைசி, 3வது போட்டியில் இத்தொடரில் 16 முறை கோப்பை வென்ற வலிமையான சீனாவை எதிர்கொண்டது.

இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. முதலில் நடந்த ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சிந்து ('நம்பர்-13'), உலகின் 'நம்பர்-2' வீராங்கனை வாங் ஜியியை சந்தித்தார். முதல் இரு செட்டை இருவரும் மாறி மாறி வென்றனர்.

மூன்றாவது, கடைசி செட்டில் ஒரு கட்டத்தில் சிந்து (18-12), 6 'கேம்' முன்னிலையில் இருந்தார். கடைசியில் 19-21 என கோட்டை விட்டார். முடிவில் சிந்து 16-21, 21-19, 19-21 என சிந்து தோல்வியடைந்தார்.

இரண்டாவது போட்டியில் இஷாராணி, 22-20, 21-13 என உலகின் 'நம்பர்-4' ஆக உள்ள யு பெய் செனிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் தேவிகா சிஹாக், 21-9, 17-21, 10-21 என வென் ஜிங்கிடம் தோற்றார்.

பெண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஷ்ருதி மிஷ்ரா, பிரியா ஜோடி, 11-21, 8-21 என்ற கணக்கில் ஷெங் ஷு, நிங் டன் ஜோடியிடம் தோற்றது. மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் கவிபிரியா, தனிஷா ஜோடி, 21-10, 12-21, 19-21 என ஜு மின், ஷூ ஜியான் ஜோடியிடம் வீழ்ந்தது.

முடிவில் இந்திய அணி 0-5 என தோற்றது. 3 போட்டியில் 2ல் வீழ்ந்த இந்தியா, காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us