/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
காலிறுதியில் இஷாராணி, தருண் * தாய்லாந்து பாட்மின்டனில்...
/
காலிறுதியில் இஷாராணி, தருண் * தாய்லாந்து பாட்மின்டனில்...
காலிறுதியில் இஷாராணி, தருண் * தாய்லாந்து பாட்மின்டனில்...
காலிறுதியில் இஷாராணி, தருண் * தாய்லாந்து பாட்மின்டனில்...
ADDED : ஜன 29, 2026 10:56 PM

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் தருண், இஷாராணி முன்னேறினர்.
தாய்லாந்தின் பாங்காக்கில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 43வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண், 76வது இடத்திலுள்ள, தைவானின் என்-சென் டிங்கினை சந்தித்தார்.
முதல் செட்டை தருண் 21-17 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 21-14 என இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 3வது, கடைசி செட் இழுபறி ஆனது. முடிவில் தருண் 24-22 என வென்றார். ஒரு மணி நேரம், 18 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் தருண் 21-17, 14-21, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மிதுன் மஞ்சு நாத், 21-11, 16-21, 12-21 என மலேசியாவின் ஜியா லீயிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 16-21, 11-21 என இந்தோனேஷியாவின் ஷுஜிவோவிடம் வீழ்ந்தார்.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் இஷாராணி ('நம்பர்-48'), தைவானின் ஷுவோ சங் ('நம்பர்-34') மோதினர். இதில் இஷாராணி, 21-13, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

