தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ருஜுலா, ஹர்ஷீல் 'சாம்பியன்' * சர்வதேச பாட்மின்டனில்...

ருஜுலா, ஹர்ஷீல் 'சாம்பியன்' * சர்வதேச பாட்மின்டனில்...

ருஜுலா, ஹர்ஷீல் 'சாம்பியன்' * சர்வதேச பாட்மின்டனில்...


ADDED : செப் 28, 2025 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்பாலா: உகாண்டாவில் 'கம்பாலா' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் ருஜுலா ராமு, இத்தொடரின் 'நம்பர்-3', சுவிட்சர்லாந்தின் ஜெஞ்ஜிராவை எதிர்கொண்டார். முதல் செட்டை 12-15 என இழந்த ருஜுலா, அடுத்த இரு செட்டையும் (15-9, 15-11) கைப்பற்றினார். 33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருஜுலா 12-15, 15-9, 15-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்ஷீல் டானி, இத்தொடரின் 'நம்பர்-1', மியான்மரின் ஹெய்னை சந்தித்தார். 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஹர்ஷீல் 16-14, 6-15, 16-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சிரஞ்ஜீவி, தர்மாக்னா ஜோடி, மலேசியாவின் அஷ்ரப் டேனியல், அரிபின் நஸ்ரி ஜோடியிடம் 15-12, 8-15, 12-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us