sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: அரையிறுதியில் மாளவிகா

/

பாட்மின்டன்: அரையிறுதியில் மாளவிகா

பாட்மின்டன்: அரையிறுதியில் மாளவிகா

பாட்மின்டன்: அரையிறுதியில் மாளவிகா


ADDED : ஜூன் 29, 2024 08:03 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 08:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெக்சாஸ்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் மாளவிகா.

அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற, ஸ்காட்லாந்தின் கில்மர் கிறிஸ்டியை சந்தித்தார். முதல் செட்டை மாளவிகா 10-21 என இழந்தார்.

பின் சுதாரித்துக் கொண்ட இவர் அடுத்த செட்டை 21-15 என வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது, கடைசி செட்டிலும் அசத்திய மாளவிகா 21-10 என கைப்பற்றினார். முடிவில் மாளவிகா 10-21, 21-15, 21-10 என்ற செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பிரியான்ஷு, 21-15, 11-21, 18-21 என, சீனாவின் லெய் லான் ஜியிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2', இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி, 17-21, 21-17, 19-21 என்ற செட்டில் 'நம்பர்-6' ஜோடி ஜப்பானின் ஹிரோகாமி, யுனா கட்டோ ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us