தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் சிந்து * ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் சிந்து * ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் சிந்து * ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்


ADDED : ஜூலை 14, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ‛சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, மலேசியாவின் லிங் சிங் வோங் மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டன், ஜூலி மாக்பர்சன் ஜோடியை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி 11-21, 10-21 என, சீனாவின் ஜீ யான் பெங், டங் பிங் ஹுவாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் டேனியல் லங்கார்ட், மட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 19-21 என இழந்த இந்திய ஜோடி, சாத்விக்சாய்ராஜுக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயத்தால் பாதியில் விலகியது. டென்மார்க் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us