தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...


ADDED : மே 19, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோவி முன்னேறியது.

கோலாலம்பூரில் மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற பிரான்சின் கிறிஸ்டோ போபோவ், டோமா போபோவ் சகோதரர்கள் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட 21-15 என எளிதாக வசப்படுத்தியது. 36 நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.

அஷ்மிதா வெற்றி

பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா, 21-23, 21-16, 21-16 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் பாய் யு போவை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சாத்வித் ரெட்டி கனபுரம், ராதிகா சர்மா ஜோடி 21-15, 21-17 என மலேசியாவின் தது ஆனிப், கிளாரிசா ஜோடியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us