தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இந்தியாவுக்கு ஆறு தங்கம் * பாரா பாட்மின்டனில் அபாரம்

இந்தியாவுக்கு ஆறு தங்கம் * பாரா பாட்மின்டனில் அபாரம்

இந்தியாவுக்கு ஆறு தங்கம் * பாரா பாட்மின்டனில் அபாரம்


ADDED : ஏப் 20, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செசியா: செக் குடியரசில் சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்-3' பிரிவு பைனலில் இந்தியாவின் தினேஷ் ராஜையா, 21-9, 21-14 என பிரேசிலின் ஜோனாதன் கார்டோசாவை வென்று தங்கம் வசப்படுத்தினார்.

ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்-4' பிரிவு பைனலில் இந்தியாவின் தகர் பிரி, இத்தொடரின் 'நம்பர்-1' வீரர் நில்ஸ் போயனிங்கை 21-13, 20-22, 21-10 என்ற கணக்கில் போராடி சாய்த்து, தங்கம் வென்றார்.

ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜதின் ஆசாத், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஆசிப் ஜோடி, 21-17, 19-21, 21-16 என வென்று தங்கம் கைப்பற்றிது.

கலப்பு இரட்டையர் 'எஸ்.எல்-3' பைனலில் இந்தியாவின் சஞ்சனா, ஜதின் ஆசாத் ஜோடி, பிரேசிலின் டேவிட் லிமா, ஹாலிமர் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-15, 21-9 என நேர் செட்டில் வென்று தங்கம், வசப்படுத்தியது.

மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ருச்சி திரிவேதி, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒமைர் முகமது ஜோடி, 21-16, 21-14 என போலந்தின் அர்பன், கொஜெரா ஜோடியை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றியது.

ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்தியாவுக்கு 6 தங்கப்பதக்கம் கிடைத்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us