தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இந்தியாவுக்கு 17 பதக்கம் * துளசிமதிக்கு 'வெள்ளி'

இந்தியாவுக்கு 17 பதக்கம் * துளசிமதிக்கு 'வெள்ளி'

இந்தியாவுக்கு 17 பதக்கம் * துளசிமதிக்கு 'வெள்ளி'


ADDED : மார் 23, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாட்ரிட்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பாட்மின்டனில் இந்திய நட்சத்திரங்கள் 5 தங்கம் உட்பட 17 பதக்கம் கைப்பற்றினர்.

ஸ்பெயினில் மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையரில் பிரமோத், சுகந்த், பெண்கள் ஒற்றையரில் மணிஷா, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நிதேஷ், ருதிக் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத், மணிஷா ஜோடி என இந்திய நட்சத்திரங்கள்ஐந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.

ஆண்கள் ஒற்றையரில் நிதேஷ், ருதிக் பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தன. பெண்கள்ஒற்றையரில் இந்தியாவின்துளசிமதி வெள்ளி வசப்படுத்தினார். தவிர ஆண்கள் இரட்டையரில் பிரமோத்/சுகந்த் ஜோடி, கலப்பு இரட்டையரில் ஷிவம், நீரஜ் ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றன.

இந்தியாவின் நீரஜ், ஜகதீஷ், ஷிவம், துளசிமதி/நிதேஷ் ஜோடி வெண்கலம் கைப்பற்றினர். ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கம் கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us