/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பிரமோத் பகத் இரண்டு தங்கம் * பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில்

ADDED : பிப் 14, 2026 10:55 PM

மனாமா: இந்தியாவின் பிரமோத் பகத், பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம் வென்றார்.
பஹ்ரைனில் பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், இந்தோனேஷியாவின் அல் இம்ரானை எதிர்கொண்டார். இதில் பிரமோத், 21-12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து 4வது, ஒட்டுமொத்தமாக 6வது தங்கம் (2009, 2015, 2019, 2022, 2024, 2026) வசப்படுத்தினார்.
புதிய சாதனை
பாரா உட்பட ஒட்டுமொத்த பாட்மின்டன் அரங்கில் ஒற்றையர் பிரிவில் அதிக முறை சாம்பியன் ஆன வீரர் என புதிய சாதனை படைத்தார் பிரமோத் (6). முன்னதாக சீனா பாட்மின்டன் வீரர் லின் டான், 5 முறை சாதித்து இருந்தார்.
தவிர, நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பைனலில் பிரமோத், சுகந்த் ஜோடி, 21-19, 21-16 என இந்தியாவின் ஜகதீஷ், நவீன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து, ஒற்றையரில் 6, இரட்டையரில் 3 (2013, 2019, 2026) என பிரமோத் மொத்தம் 9 தங்கம் வசப்படுத்தி உள்ளார்.