தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/திரீஷா, காயத்ரி ஜோடி முன்னேற்றம் * பாட்மின்டன் தரவரிசையில்...

திரீஷா, காயத்ரி ஜோடி முன்னேற்றம் * பாட்மின்டன் தரவரிசையில்...

திரீஷா, காயத்ரி ஜோடி முன்னேற்றம் * பாட்மின்டன் தரவரிசையில்...


ADDED : ஆக 25, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாட்மின்டன் இரட்டையர் தரவரிசையில் திரீஷா, காயத்ரி ஜோடி 27வது இடத்துக்கு முன்னேறியது.

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில், பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. சமீபத்தில் டில்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில், உலகத் தரவரிசையில் 'நம்பர்-39' வது இடத்தில் இருந்த இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி பங்கேற்றது.

'நம்பர்-7' ஜப்பான், 'நம்பர்-4' சீனா ஜோடிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 'நம்பர்-1' சீன ஜோடியிடம் (லியு செங், டான் நிங்), 18-21, 21-13, 8-21 என போராடி தோற்றது.

இருப்பினும், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப், பெண்கள் இரட்டையரில், 15 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்தது. இதையடுத்து, கூடுதலாக 10,500 புள்ளிகள் கிடைக்க, 12 இடங்கள் முன்னேறிய இந்த ஜோடி, 27வது இடம் பிடித்தது. முன்னதாக கடந்த 2025, ஜன.,ல் இந்த ஜோடி தரவரிசையில் 9வது இடத்தில் இருந்தது சிறந்த இடமாக உள்ளது.

ஆயுஷ் 'இரண்டு'

பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, தனது 10 வது இடத்தில் தொடர்கிறார். உன்னதி 25வது, தான்வி 26வது இடம் பிடித்தனர்.

ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, 2 இடம் முன்னேறி 'டாப்-20' பட்டியலில் (20வது) நுழைந்தார். மற்றொரு இந்திய வீரர் லக்சயா சென், 13வது இடத்துக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us