/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
/
பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
ADDED : மே 31, 2025 09:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர்-27'), உலகின் 'நம்பர்-1', மலேசியாவின் மலேசியாவின் ஆரோன் சியா, ஊய் இக் சோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 21-19 என கைப்பற்றியது இந்திய ஜோடி. அடுத்த செட்டை 10-21 என எளிதாக கோட்டை விட்டது. மூன்றாவது, கடைசி செட்டில் 11-20 என பின் தங்கியது. அடுத்து 18-20 என நெருங்கிய போதும், 18-21 என செட் பறிபோனது. முடிவில் இந்திய ஜோடி 21-19, 10-21, 18-21 என தோல்வியடைந்தது.