தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/அரையிறுதியில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்

அரையிறுதியில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்

அரையிறுதியில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்


ADDED : மே 29, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் கய் ஜிங், ஆரோன் தய் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 19-21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த இரு செட்டையும் 21-17, 21-13 என கைப்பற்றியது.

ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 19-21, 21-17, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலேசியாவின் சென், டோ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டில் 16-18 என இந்திய ஜோடி பின்தங்கியது. அப்போது, காயம் காரணமாக மலேசிய ஜோடி விலகியது. இதனால் இந்திய ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிந்து ஏமாற்றம்

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகத் தரவரிசையில் 12வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 17-21, 14-21 என உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், 19-21, 21-15, 15-21 என ஜப்பானின் வடனபேவிடம் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us