தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இந்தியாவிடம் வீழ்ந்தது கனடா: தாமஸ் கோப்பை பாட்மின்டனில்

இந்தியாவிடம் வீழ்ந்தது கனடா: தாமஸ் கோப்பை பாட்மின்டனில்

இந்தியாவிடம் வீழ்ந்தது கனடா: தாமஸ் கோப்பை பாட்மின்டனில்


ADDED : ஏப் 24, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 09:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹோர்சென்ஸ்: தாமஸ் கோப்பை பாட்மின்டன் லீக் போட்டியில் இந்திய அணி 4-1 என, கனடாவை வீழ்த்தியது.

டென்மார்க்கில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, கனடா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் 21-18, 19-21, 10-21 என, கனடாவின் விக்டர் லாயிடம் தோல்வியடைந்தார்.

இரட்டையர் பிரிவு போட்டியில் எழுச்சி கண்ட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் ஜோனாதன் பிங் டிசன் லாய், கெவின் லீ ஜோடியை வென்றது.

ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-17 என, கனடாவின் பிரையன் யாங்கை தோற்கடித்தார். பின், இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 21-7, 21-15 என, கனடாவின் அலெக்சாண்டர் லிண்ட்மேன், யாகுரா ஜோடியை வீழ்த்தியது.

ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-17, 21-12 என, கனடாவின் ஜோஷுவா நுகுயனை வென்றார். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவை (ஏப். 27) சந்திக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us