/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
காலிறுதியில் சாத்விக்-சிராக்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
/
காலிறுதியில் சாத்விக்-சிராக்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
காலிறுதியில் சாத்விக்-சிராக்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
காலிறுதியில் சாத்விக்-சிராக்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
ADDED : மே 16, 2024 10:06 PM

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி முன்னேறியது.
பாங்காக்கில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ஜி ஹாவ் நான், ஜெங் வெய் ஹான் ஜோடியை சந்தித்தது. மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக், சிராக் ஜோடி 21-16, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-19, 21-17 என சீனதைபேயின் ஹங் என்-டிசூ, லின் யு-பெய் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ருதுபர்னா, ஸ்வேதபர்னா ஜோடி தோல்வியடைந்தது. கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி தோல்வியை தழுவியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மெய்ரபா லுவாங் மைஸ்னம் 21-14, 22-20 என டென்மார்க்கின் மட்ஸ் கிறிஸ்டோபெர்சனை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா 15-21, 21-12, 12-21 என சீனாவின் ஹன் யுவிடம் தோல்வியடைந்தார்.