தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/டென்மார்க் வீரர் ஓய்வு: சர்வதேச பாட்மின்டனில் இருந்து

டென்மார்க் வீரர் ஓய்வு: சர்வதேச பாட்மின்டனில் இருந்து

டென்மார்க் வீரர் ஓய்வு: சர்வதேச பாட்மின்டனில் இருந்து


ADDED : ஏப் 15, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சர்வதேச பாட்மின்டன் போட்டியில் இருந்து டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் ஓய்வு பெற்றார்.

டென்மார்க் பாட்மின்டன் வீரர் விக்டர் ஆக்சல்சென் 32. ஒலிம்பிக் (2020, 2024ல் தங்கம், 2016ல் வெண்கலம்), உலக சாம்பியன்ஷிப் (2017, 2022ல் தங்கம், 2014ல் வெண்கலம்), ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (2016, 2018, 2022ல் தங்கம், 2021ல் வெள்ளி, 2014, 2017, 2024ல் வெண்கலம்) தனிநபர் பிரிவில் பதக்கம் வென்றார். உலக தரவரிசையில் 183 வாரம் 'நம்பர்-1' இடத்தில் இருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதுகுப்பகுதி காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்த விக்டர் ஆக்சல்சென், கடைசியாக அக்டோபர் மாதம் நடந்த டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்றார். அதன்பின் எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விக்டர் ஆக்சல்சென் அறிவித்தார்.

இதுகுறித்து ஆக்சல்சென் கூறுகையில், ''முதுகுப்பகுதி காயத்தால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின் என்னால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் ஓய்வு முடிவை எடுக்க வேண்டிய கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. போட்டியில் விளையாட என் உடல் ஒத்துழைப்பு தராததால், மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி ஓய்வு பெறுகிறேன். நான் களமிறங்கிய ஒவ்வொரு போட்டியும் என்றும் மறக்க முடியாதவை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us