/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஜெர்மன் ஓபன் பாட்மின்டன்: காலிறுதியில் உன்னதி
/
ஜெர்மன் ஓபன் பாட்மின்டன்: காலிறுதியில் உன்னதி
ADDED : பிப் 28, 2025 09:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்ஹெய்ம்: ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் உன்னதி ஹூடா, தஸ்னிம் மிர் முன்னேறினர்.
ஜெர்மனியில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் அசுகா டகாஹஷி மோதினர். உன்னதி 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தஸ்னிம் மிர், சீனதைபேயின் டங் சியோ-டோங் மோதினர். இதில் அசத்திய தஸ்னிம் மிர் 21-17, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.