தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/சிந்து வழியில் சாதிப்பேன்: இளம் தன்வி சர்மா நம்பிக்கை

சிந்து வழியில் சாதிப்பேன்: இளம் தன்வி சர்மா நம்பிக்கை

சிந்து வழியில் சாதிப்பேன்: இளம் தன்வி சர்மா நம்பிக்கை


ADDED : ஏப் 15, 2024 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 10:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''உபர் கோப்பை பாட்மின்டனில் சிந்துவை போல ஆக்ரோஷமாக விளையாடி சாதிப்பேன்,'' என தன்வி சர்மா தெரிவித்துள்ளார்.

சீனாவில் தாமஸ்-உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் (ஏப். 28 - மே 5) நடக்கவுள்ளது. பெண்களுக்கான உபர் கோப்பை 30வது சீசனில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தன்வி சர்மா 15, தேர்வானார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஆசிய பாட்மின்டனில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

தன்வி சர்மா கூறியது: பாட்மின்டன் அரங்கில், அக்கா சிந்துவை போல சாதிக்க விரும்புகிறேன். இவர் தான் எனக்கு 'ரோல் மாடல்'. மலேசியாவில் இவருடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளேன். நட்புடன் பழகினார். ஆசிய பாட்மின்டனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தது மகிழ்ச்சி. இது என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். சிந்து உள்ளிட்ட சீனியர் வீராங்கனைகளிடம் இருந்து பாட்மின்டன் குறித்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் என் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட உதவும்.

மீண்டும் இந்திய அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சி. போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்பேன். சிந்துவை போல எனது ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு தன்வி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us