/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்...
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்...
ADDED : மார் 05, 2024 10:00 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்றது.
பிரான்சின் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடரின் 94வது சீசன் துவங்கியது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் இயுவ் சின், தியோ ஏயி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது. இரண்டாவது செட் இழுபறியாக இருந்தது. இதை இந்திய ஜோடி 24-22 என போராடி வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-13, 24-22 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி, தனிஷா-அஷ்வினி ஜோடி மோதின. முதல் செட்டை அஷ்வினி ஜோடி 21-16 என வென்றது. பின் அடுத்த செட்டை காயத்ரி ஜோடி 21-19 என வசப்படுத்தியது. தொடர்ந்து மூன்றாவது செட்டை காயத்ரி ஜோடி 21-17 என கைப்பற்றியது. முடிவில் காயத்ரி ஜோடி 16-21, 21-19, 21-17 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பானின் கன்டா சுனேயமா மோதினர். இதில் லக்சயா சென் 15-21, 21-15, 21-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

