sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...

/

அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...

அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...

அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...


ADDED : பிப் 16, 2024 09:56 PM

Google News

ADDED : பிப் 16, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷா ஆலம்: ஆசிய அணிகளுக்கான பாட்மின்டனில் இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் 3-0 என ஹாங்காங்கை வீழ்த்தியது.

ஆசிய பாட்மின்டன் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் ஐந்தாவது சீசன் மலேசியாவில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான காலிறுதியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது.

முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து, சின் யான் ஹாப்பியை 21-7, 16-21, 21-12 என போராடி வென்றார். இரட்டையர் போட்டியில் அஷ்வினி, தனிஷா ஜோடி 21-10, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒற்றையரில் அஷ்மிதா 21-12, 21-13 என சம் ஈயை வீழ்த்தினார்.

முடிவில் இந்திய பெண்கள் அணி 3-0 என வெற்றி பெற்று, ஆசிய அணிகளுக்கான பாட்மின்டனில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தபட்ச பதக்கத்தை உறுதி செய்தது.

ஆண்கள் அதிர்ச்சி

ஆண்கள் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் மோதின. முதல் போட்டியில் பிரனாய் 16-21, 24-26 என நிஷிமோட்டோவிடம் தோற்றார். இரட்டையர் போட்டியில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-17 என வெற்றி பெற்றது. 2வது ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-19, 22-20 என வெற்றி பெற, இந்தியா 2-1 என முந்தியது.

ஆனால் இரண்டாவது இரட்டையர் போட்டியில் அர்ஜுன்-துருவ் ஜோடி தோற்றது. கடைசியாக நடந்த மூன்றாவது ஒற்றையரில் ஸ்ரீகாந்த், மெமோட்டோ மோதினர். முதல் செட்டை 21-19 என வென்ற ஸ்ரீகாந்த் அடுத்த செட்டை 9-21 என இழந்தார். 3வது, கடைசி செட்டில் ஒரு கட்டத்தில் 19-12 என முன்னிலையில் இருந்தார். கடைசியில் 20-22 என கோட்டை விட்டு வீழ்ந்தார். முடிவில் இந்தியா 2-3 என தோற்று வெளியேறியது.






      Dinamalar
      Follow us