ADDED : ஜூன் 03, 2026 10:14 PM

ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி காயத்தால் பாதியில் விலகியது.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் காங் காய் ஜிங், ஆரோன் டாய் ஜோடியை சந்தித்தது. முதல் சுற்றில் இந்திய ஜோடி 6-11 என பின்தங்கி இருந்த போது, சாத்விக்சாய்ராஜின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய ஜோடி பாதியில் விலகியது.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி 21-14, 21-14 என, சீனதைபேயின் போ-சுவான் யாங், லிங் பெங் ஹு ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஹாங் யாங் வெங் மோதினர். இதில் ஆயுஷ் 8-21, 22-20, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 17-21, 21-16, 19-21 என, அயர்லாந்தின் நிஹாத் நுகுயெனிடம் போராடி தோல்வியடைந்தார்.
