தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: அன்மோல் வெற்றி

பாட்மின்டன்: அன்மோல் வெற்றி

பாட்மின்டன்: அன்மோல் வெற்றி


ADDED : ஏப் 03, 2024 07:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஸ்தானா: கஜகஸ்தான் சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் வெற்றி பெற்றார்.

கஜகஸ்தானில் சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 22, அன்மோல் கார்ப் 17, மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு தேசிய சாம்பியன்' அன்மோல் 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அனுபமா உபத்யயா 21-13, 21-13 என சகவீராங்கனை ஹர்ஷிதாவை வீழ்த்தினார். தன்யா ஹேம்நாத் 21-19, 21-10 என சகவீராங்கனை ஐஷானி திவாரியை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி, ஒரிஜித் சாலிஹா மோதினர். இதில் சங்கர் முத்துசாமி 21-13, 19-21, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் அனிருத் ஜனார்த்தனன், ரகு மாரிசாமி, தருண், ஆர்யமன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி ஜோடி வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us