sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

காலிறுதியில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்

/

காலிறுதியில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்

காலிறுதியில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்

காலிறுதியில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்


ADDED : அக் 23, 2025 10:17 PM

Google News

ADDED : அக் 23, 2025 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்டு: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா, அன்வி உள்ளிட்டோர் முன்னேறினர்.

சீனாவின் செங்டு நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (15, 17 வயது) தொடர் நடக்கிறது. நேற்று 'ரவுண்டு-16' போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் (17 வயது) போட்டியில் இந்தியாவின் லக்சயா, தென் கொரியாவின் யுன் சியோ லீ மோதினர். இதில் லக்சயா 21-16, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் திக் ஷா 21-19, 21-15 என சீனதைபேயின் பின் ஹுவான் சியாங்கை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் (17 வயது) போட்டியில் இந்தியாவின் ஜாக் ஷேர் சிங் 21-12, 21-17 என மலேசியாவின் வின்சன் சோவை தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையரில் (15 வயது) இந்தியாவின் ஷைனா 21-17, 21-16 என சீனாவின் மன் லின் லீயை வென்றார். மற்றொரு போட்டியில் அன்வி ரத்தோர் 21-15, 21-12 என இந்தோனேஷியாவின் கலியா ரஹ்மதானியை தோற்கடித்தார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அதிதி, பொன்னம்மா விருத்தி ஜோடி 17-21, 21-15, 21-17 என தென் கொரியாவின் யுன் சியோ லீ, யோ ஜியோங் பார்க் ஜோடியை வென்றது.






      Dinamalar
      Follow us