/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மூன்றாவது சுற்றில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
/
மூன்றாவது சுற்றில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
மூன்றாவது சுற்றில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
மூன்றாவது சுற்றில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
ADDED : அக் 22, 2025 10:03 PM

செங்டு: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் 3வது சுற்றுக்கு (17 வயது) இந்தியாவின் லக்சயா, திக் ஷா முன்னேறினர்.
சீனாவின் செங்டு நகரில், ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா, சீனதைபேயின் குவான் யி லின் மோதினர். இதில் லக்சயா 21-17, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் திக் ஷா 17-21, 21-16, 21-11 என சீனாவின் யா ரு லுவோவை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) 2வது சுற்றில் இந்தியாவின் ஜாக் ஷேர் சிங் 21-14, 21-17 என சீனாவின் பெங் யூ ஜாங்கை வீழ்த்தினார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் நிஷ்சல் சந்த், ஹர்திக் திவ்யான்ஷ் தோல்வியடைந்தனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் தக் ஷன் சுகுமாறன் 21-23, 21-9, 21-15 என ஜப்பானின் டாகு யமாகுச்சியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வாசிர் சிங் 17-21, 21-19, 22-20 என ஜப்பானின் ஒசுகே டகாஹடாவை வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) 2வது சுற்றில் இந்தியாவின் அன்வி ரத்தோர் 21-13, 15-21, 21-18 என ஜப்பானின் யுசுனா அனாமியை வீழ்த்தினார்.