உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : டிச 27, 2024 10:28 PM

அ நிறம் | அளவு
ஷென்சென்: கிங் கோப்பை பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.
சீனாவில், கிங் கோப்பை சர்வதேச பாட்மின்டன் முதல் சீசன் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் அங்கஸ் கா லாங் மோதினர். முதல் செட்டை 10-21 என இழந்த லக்சயா சென், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-13 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 21-13 என வென்றார்.
முடிவில் லக்சயா சென் 10-21, 21-13, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
