/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
தங்கம் வெல்வார் லக்சயா: டென்மார்க் வீரர் நம்பிக்கை
/
தங்கம் வெல்வார் லக்சயா: டென்மார்க் வீரர் நம்பிக்கை
தங்கம் வெல்வார் லக்சயா: டென்மார்க் வீரர் நம்பிக்கை
தங்கம் வெல்வார் லக்சயா: டென்மார்க் வீரர் நம்பிக்கை
ADDED : ஆக 08, 2024 11:14 PM

புதுடில்லி: ''லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் லக்சயா சென் தங்கம் வெல்வார்,'' என டென்மார்க்கின் ஆக்சல்சென் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 22, நான்காவது இடம் பிடித்தார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் ஆனார் லக்சயா சென். அரையிறுதியில் டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வியடைந்த இவர், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் வீழ்ந்தார்.
லக்சயாவின் செயல்பாடு குறித்து இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் (2020, 2024), இரண்டு முறை உலக சாம்பியன் (2017, 2022) பட்டம் வென்ற ஆக்சல்சென் கூறுகையில், ''பாரிஸ் ஒலிம்பிக்கில் லக்சயா சென் சிறப்பாக விளையாடினார். திறமையான வீரரான இவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக திகழ்வார். இதற்கான திறமை, தகுதி இவரிடம் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க வாழ்த்துகள்,'' என்றார்.