/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மலேசிய பாட்மின்டன்: தேவிகா 'சாம்பியன்'
/
மலேசிய பாட்மின்டன்: தேவிகா 'சாம்பியன்'
ADDED : ஆக 17, 2025 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இபோ: மலேசிய சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீராங்கனை தேவிகா சாம்பியன் பட்டம் வென்றார்.
மலேசியாவில், சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. உலக பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் சோதனை முயற்சியாக 21க்குப் பதில், 15 புள்ளி கொண்ட செட் முறை பயன்படுத்தப்பட்டது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தேவிகா சிஹாக், இஷாராணி மோதினர். இதில் தேவிகா 15-7, 15-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, தேவிகா வென்ற முதல் சர்வதேச சேலஞ்ச் பட்டம் ஆனது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், அரையிறுதி வரை சென்றார்.