/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஒலிம்பிக்: லக்சயாவுக்கு 'லக்' * 20 ஆண்டுக்குப் பின் இருவர் வாய்ப்பு
/
ஒலிம்பிக்: லக்சயாவுக்கு 'லக்' * 20 ஆண்டுக்குப் பின் இருவர் வாய்ப்பு
ஒலிம்பிக்: லக்சயாவுக்கு 'லக்' * 20 ஆண்டுக்குப் பின் இருவர் வாய்ப்பு
ஒலிம்பிக்: லக்சயாவுக்கு 'லக்' * 20 ஆண்டுக்குப் பின் இருவர் வாய்ப்பு
ADDED : மார் 29, 2024 10:54 PM

புதுடில்லி: ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகிறார் லக்சயா சென்.
பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11 ல் நடக்கவுள்ளது. இதற்கான பாட்மின்டனில் உலகத்தரவரிசையில் 'டாப்-16' இடத்திலுள்ள நட்சத்திரங்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும். இதுவரை இந்திய வீரர் பிரனாய் (நம்பர்-9), வீராங்கனை சிந்து (நம்பர்-10), ஆண்கள் இரட்டையரில் 'நம்பர்-1' இடத்திலுள்ள சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மட்டும் தகுதி பெற்றிருந்தனர். இதில் இணைய உள்ளார் இளம் வீரர் லக்சயா சென்.
2024 ஆண்டு துவக்கத்தில் 'டாப்-20' பட்டியலில் இடம் பெறாத லக்சயா, சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிரெஞ்ச் ஓபன், ஆல் இங்கிலாந்து ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து 'நம்பர்-13' இடத்துக்கு முன்னேறினார். பாரிஸ் ஒலிம்பிக் தகுதி முடிய இன்னும் ஒரு தொடர் மட்டும் மீதமுள்ளது. இதனால் லக்சயா 'டாப்-16' பட்டியலில் இடம் பெறுவது உறுதியாகிறது. தவிர ஒலிம்பிக் அரங்கில் முதன் முறையாக அறிமுக வாய்ப்பு பெறவுள்ளார்.
20 ஆண்டு
இதையடுத்து 20 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் பிரனாய், லக்சயா என இருவர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அபின் ஷ்யாம் குப்தா, நிகில் கனேட்கர் என இரு வீரர்கள் பங்கேற்றனர்.

