தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் சதிஷ் குமார்: ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் சதிஷ் குமார்: ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் சதிஷ் குமார்: ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்


ADDED : ஆக 21, 2024 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யோகோஹாமா: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் சதிஷ் குமார் தகுதி பெற்றார்.

ஜப்பானில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்சென் மோதினர். முதல் செட்டில் சதிஷ் குமார் 6-1 என முன்னிலை பெற்றிருந்த போது டென்மார்க் வீரர் காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து சதிஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 19-21, 14-21 என ஜப்பானின் சுனேயமாவிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் இரட்யைடர் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா, ஸ்வேதாபர்னா ஜோடி 8-21, 14-21 என டென்மார்க்கின் ஜூலி, சரோவ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி காயத்தால் பாதியில் விலகியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us