தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/சாத்விக்-சிராக் 2வது இடம்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்

சாத்விக்-சிராக் 2வது இடம்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்

சாத்விக்-சிராக் 2வது இடம்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்


ADDED : மே 17, 2026 09:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 09:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 2வது இடம் பிடித்தது.

பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் லியோ ரோலி கர்னான்டோ, டேனியல் மார்தின் ஜோடியை சந்தித்தது. இரண்டு முறை (2019, 2024) சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் செட்டை 12-21 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 23-25 என போராடி கோட்டை விட்டது.

மொத்தம் 53 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 12-21, 23-25 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us