தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/சாத்விக்-சிராக் 'வெண்கலம்': உலக பாட்மின்டனில் அபாரம்

சாத்விக்-சிராக் 'வெண்கலம்': உலக பாட்மின்டனில் அபாரம்

சாத்விக்-சிராக் 'வெண்கலம்': உலக பாட்மின்டனில் அபாரம்


ADDED : ஆக 31, 2025 03:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 03:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிஸ்: உலக பாட்மின்டன் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் வென்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 19-21 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-18 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இந்திய ஜோடி 12-21 என கோட்டைவிட்டது.

ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-18, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இது, உலக பாட்மின்டன் அரங்கில் சாத்விக், சிராக் ஜோடி கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே 2022ல் வெண்கலம் வென்றிருந்தது. தவிர இது, உலக பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த 15வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us