/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக்-சிராக் ஏமாற்றம்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
/
சாத்விக்-சிராக் ஏமாற்றம்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஏமாற்றம்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஏமாற்றம்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
ADDED : நவ 23, 2024 10:18 PM

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்தது.
சீனாவில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் ஜின் யோங், சியோ செயுங் ஜெ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 18-21 என போராடி இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-14 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இந்திய ஜோடி 16-21 எனக் கோட்டைவிட்டது.
ஒரு மணி நேரம், 14 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 21-14, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே சிந்து, லக்சயா சென், மாளவிகா உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.

