தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பைனலில் சாத்விக்-சிராக்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்

பைனலில் சாத்விக்-சிராக்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்

பைனலில் சாத்விக்-சிராக்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்


ADDED : மே 30, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 10:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கப்பூர் சிட்டி: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி முன்னேறியது.

சிங்கப்பூரில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-4' இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, உலகின் 'நம்பர்-1' தென் கொரியாவின் செயுங் ஜே சியோ, கிம் வோன் ஹோ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-18 என வென்றது.

மொத்தம் 52 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக், சிராக் ஜோடி 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, ஜப்பானின் யுச்சி ஷிமோகாமி, சயாகா ஹோபாரா ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய ஜோடி 16-21, 21-17, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us