/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக்-சிராக் ஜோடி 'ஷாக்' * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்
/
சாத்விக்-சிராக் ஜோடி 'ஷாக்' * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஜோடி 'ஷாக்' * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஜோடி 'ஷாக்' * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்
ADDED : மார் 15, 2024 09:12 PM

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 'ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப்' தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 'நம்பர்-3' ஆக உள்ள, 2022 தொடரில் இங்கு தங்கம் வென்ற, இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா, முகமது பிக்ரி ஜோடியை சந்தித்தது.
சமீபத்திய பிரெஞ்ச் ஓபன் தொடரில் கோப்பை வென்ற இந்திய ஜோடி, எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது. மாறாக முதல் செட்டின் துவக்கத்தில் இருந்தே பின் தங்கியது. கடைசி வரை மீள முடியாத நிலையில் முதல் செட்டை 16-21 என கோட்டை விட்டது. அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் துவக்கத்தில் 3-10 என்ற நிலைக்கு சென்றது. பின் 15-21 என நழுவவிட்டது.
41 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 16-21, 15-21 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி 21-11, 11-21, 11-21 என்ற கணக்கில் சீன ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.

