/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்
/
காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்
காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்
காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்
ADDED : மார் 28, 2024 10:12 PM

மாட்ரிட்: ஸ்பெயின் பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து.
ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் ஹுவாங் யுவை சந்தித்தார்.
முதல் செட்டை சிந்து 21-14 என கைப்பற்றினார். அடுத்த செட்டிலும் அசத்திய இவர், 21-12 என எளிதாக வசப்படுத்தினார். 36 நிமிடம் நடந்த போட்டியில் சிந்து, 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஸ்ரீகாந்த் ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தொடரில் 'நம்பர்-7' வது அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த், தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய ஜப்பானின் டகாஹஷியை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 18-21, 15-21 என நேர் செட்டில் தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீரர்கள் சதிஷ் குமார் கருணாகரன், கிரண் ஜார்ஜ் தங்களது முதல் சுற்றில் தோல்வியடைந்தனர்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி 16-21, 22-20, 21-14 என தென் கொரியாவின் சென் ரே, சிங் யங் ஜோடியை வீழ்த்தியது.