தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்

இரண்டாவது சுற்றில் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்

இரண்டாவது சுற்றில் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்


ADDED : மார் 27, 2024 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2024 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாட்ரிட்: ஸ்பெயின் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சிந்து.

ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை இந்தியாவின் சிந்து, கனடாவின் வென் யு ஜங் மோதினர். முதல் செட்டை சிந்து 21-16 என வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டையும் 21-12 என எளிதாக கைப்பற்றினார்.

30 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சிந்து, 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா, 13-21, 11-21 என தாய்லாந்தின் ரட்சனாக்கிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், இந்தோனேஷியாவின் ஜியா ஜேசனை எதிர்கொண்டார். இதில் சதிஷ் குமார் 21-15, 21-19 என்ற செட்டில் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us