ADDED : மார் 20, 2024 10:51 PM

பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டன் முதல் சுற்றில் சிந்து, லக்சயா, ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றனர்.
சுவிட்சர்லாந்தில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், மலேசியாவின் லியாங் ஹாவோவை சந்தித்தார். இதில் லக்சயா 21-19, 15-21, 21-11 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், தென் கொரியாவின் வாங் வெய்யை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து 21-12, 21-13 என்ற கணக்கில் தாய்லாந்தின் பார்ன்பிச்சாவை வீழ்த்தினார். பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி 21-18, 12-21, 21-19 என இந்தோனேஷிய ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி 21-13, 21-19 என தென் கொரிய ஜோடியை சாய்த்து, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.

