/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சுவிஸ் பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் ஏமாற்றம்
/
சுவிஸ் பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் ஏமாற்றம்
ADDED : மார் 24, 2024 10:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற சுவிஸ் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனதைபேயின் லின் சுன்-யி மோதினர். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 9-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 18-21 என போராடி கோட்டைவிட்டார்.
ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-15, 9-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

