பிரனாய் அதிர்ச்சி தோல்வி * தாய்லாந்து பாட்மின்டனில்...
பிரனாய் அதிர்ச்சி தோல்வி * தாய்லாந்து பாட்மின்டனில்...
ADDED : மே 15, 2024 10:39 PM

பாங்காங்: தாய்லாந்து பாட்மின்டனின் முதல் சுற்றில் பிரனாய், தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய சக வீரர் மெய்ரபாவிடம் தோல்வியடைந்தார்.
தாய்லாந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நுார் முகமது, வீ கியாங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 21-13 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
மெய்ரபா கலக்கல்
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் பிரனாய், தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய சக வீரர் மெய்ரபா லுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை 19-21 என இழந்த பிரனாய், அடுத்த செட்டையும் 18-21 என கோட்டை விட்டார். முடிவில் மெய்ரபா, 21-19, 21-18 என வெற்றி பெற்று, பிரனாய்க்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, இந்தோனேஷியாவின் நுாருமியுடன் மோதினார். இதில் அஷ்மிதா, 19-21, 2115, 21-14 என போராடி வெற்றி பெற்றார். மற்றொரு வீராங்கனை மாளவிகா 11-21, 10-21 என சீனாவின் ஹான் யுவேயிடம் தோல்வியடைந்தார்.
