தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா * தாமஸ் கோப்பை இன்று துவக்கம்

பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா * தாமஸ் கோப்பை இன்று துவக்கம்

பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா * தாமஸ் கோப்பை இன்று துவக்கம்


ADDED : ஏப் 26, 2024 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்டு: தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்திய ஆண்கள் அணி மீண்டும் சாதிக்க காத்திருக்கிறது.

சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் அணிகளுக்கான 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) தொடர், சீனாவின் செங்டுவில் இன்று துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் மோத உள்ளன.

போட்டி எப்படி

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். 'நடப்பு சாம்பியனாக' களமிறங்கும் இந்திய ஆண்கள் அணி, 'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் 'சி' பிரிவில் 14 கோப்பை வென்ற இந்தோனேஷியா, தாய்லாந்து, இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

பாட்மின்டன் வரலாற்றில் முதன் முறையாக கடந்த ஆண்டு கோப்பை வென்ற இந்தியா, இன்று தனது முதல் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் பிரனாய், லக்சயா, ஸ்ரீகாந்த் ஒற்றையரில் களமிறங்க உள்ளனர். இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்க உள்ளது.

சிந்து இல்லை

இந்திய பெண்கள் அணி, உபர் தொடரில் 1957, 2014, 2016 என மூன்று முறை அரையிறுதிக்கு முன்னேறியது தான் அதிகபட்சம். இம்முறை 'ஏ' பிரிவில், வலிமையான சீனா, சிங்கப்பூர், கனடாவுடன் இடம் பிடித்துள்ளது. முன்னணி வீராங்கனை சிந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இத்தொடரில் பங்கேற்கவில்லை.

அஷ்வினி-தனிஷா, திரீசா-காயத்ரி ஜோடியும் விலகின. இதனால் அன்மோல் கார்ப், 15 வயது தன்வி சர்மா, அஷ்மிதா, இஷாராணி உள்ளிட்ட இளம் வீராங்கனைகள் எப்படி செயல்பட போகின்றனர் என பொறுத்திருந்து காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us