தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/வெளியேறியது இந்திய அணி * பாட்மின்டன் காலிறுதியில் தோல்வி

வெளியேறியது இந்திய அணி * பாட்மின்டன் காலிறுதியில் தோல்வி

வெளியேறியது இந்திய அணி * பாட்மின்டன் காலிறுதியில் தோல்வி


ADDED : மே 02, 2024 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2024 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்டு: தாமஸ், உபர் பாட்மின்டன் காலிறுதியில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் தோற்று வெளியேறின.

சீனாவில் 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) பாட்மின்டன் தொடர் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்திய ஆண்கள் அணி, காலிறுதியில் வலிமையான சீனாவை சந்தித்தது. முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிரனாய் (நம்பர்-9), 21-15, 11-21, 14-21 என சீனாவின் யு கு ஷியிடம் ('நம்பர்-2') தோற்றார்.

இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 15-21, 21-11, 12-21 என சீனாவின் லியாங், வாங் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், 13-21, 21-8, 21-14 என சீனாவின் ஷி பெங்கை வென்றார்.

இரண்டாவது இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, சாய் பிரதீக் ஜோடி, 10-21, 10-21 என தோற்றது. முடிவில் இந்திய அணி 1-3 என தோற்று வெளியேறியது.

போராடிய பெண்கள்

பெண்கள் காலிறுதியில் இந்தியாவின் இளம் அணி, வலிமையான ஜப்பானை சந்தித்தது. முதல் போட்டியில் 'நம்பர்-53' வீராங்கனை, இந்தியாவின் அஷ்மிதா, 'நம்பர்-11' ஆக உள்ள ஜப்பானின் அயா ஓஹோரியை சந்தித்தார். முதல் இரு செட்டை இருவரும் மாறி மாறி வென்றனர். மூன்றாவது செட்டில் அஷ்மிதா ஒரு கட்டத்தில் 8-3 என முந்தினார்.

கடைசியில் 15-21 என இழந்தார். 63 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் அஷ்மிதா 10-21, 22-20, 15-21 என தோற்றார்.

இரட்டையரில் இந்தியாவின் பிரியா, ஸ்ருதி ஜோடி 8-21, 9-21 என தோல்வியடைந்தது. இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் இஷா ராணி, 15-21, 12-21 என முன்னாள் உலக சாம்பியன் ஓகுஹராவிடம் தோற்றார். முடிவில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us