/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
உபர் கோப்பை பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
/
உபர் கோப்பை பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
ADDED : ஏப் 29, 2024 12:04 AM

செங்டு: உபர் கோப்பை பாட்மின்டன் காலிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
சீனாவில் 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா 15-21, 18-21 என்ற கணக்கில் சிங்கப்பூரின் யோவ் ஜியா மின்னிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் பிரியா-ஸ்ருதி ஜோடி 21-15, 21-16 என சிங்கப்பூரின் ஜியாவோ என் ஹெங், ஜின் யு ஜியா ஜோடியை வீழ்த்தியது.
ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் இஷாராணி 21-13, 21-16 என சிங்கப்பூரின் இன்சைரா கானை வென்றார். இரட்யைடர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் சிம்ரன் சிங், ரித்திகா தாக்கர் ஜோடி 21-8, 21-11 என சிங்கப்பூரின் யி டிங் எல்சா லாய், ஜான் மைக்கேல் ஜோடியை தோற்கடித்தது.
ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-15, 21-13 என சிங்கப்பூரின் லீ ஜின் யி மேகனை தோற்கடித்தார். முடிவில் 'ஆசிய சாம்பியன்' இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கனடாவை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.

