/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
100 கோடி பார்வையாளர்கள்: 'ஜியோஸ்டார்' சாதனை
/
100 கோடி பார்வையாளர்கள்: 'ஜியோஸ்டார்' சாதனை
ADDED : ஜூன் 19, 2025 10:15 PM

புதுடில்லி: பிரிமியர் லீக் போட்டிகளை 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்ததாக 'ஜியோஸ்டார்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி-20') 18வது சீசன் நடந்தது. இதற்கான போட்டிகளை 'ஜியோஸ்டார்' நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு ('டிவி', 'டிஜிட்டல்') செய்தது. இது தொடர்பாக ஜியோஸ்டார்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.
பிரிமியர் போட்டிகளை 100 கோடிக்கும் அதிகமான பேர் 84,000 கோடி நிமிடங்கள் பார்த்தது சாதனை. 'ஜியோ ஹாட்ஸ்டார்' செயலி மூலம் 2310 கோடி பார்வைகளை கடந்தது. மொத்தம் 38,460 கோடி நிமிடம் பார்க்கப்பட்டது. இது, கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகம். இதற்கு, டிஜிட்டல் பெரிய திரைகள் வழியாக பார்வையிடும் அளவு 49 சதவீதம் அதிகரித்ததே காரணம். 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' டிவி சேனல் வழியாக 45,600 கோடி நிமிடம் பார்க்கப்பட்டது.
பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதிய பைனல், 'டி-20' வரலாற்றில் அதிக நேரம் பார்க்கப்பட்ட போட்டியானது. 'ஜியோஸ்டார்' பிளாட்பார்ம் ('டிவி', டிஜிட்டல்) வழியாக 3170 கோடி நிமிடம் பார்த்தனர். இதில் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' டிவி சேனல் வழியாக 16.9 கோடி பேர், 1500 கோடி நிமிடம் கண்டு ரசித்தனர். 'ஜியோ ஹாட்ஸ்டார்' டிஜிட்டல் செயலி வழியாக 1674 கோடி நிமிடம் பார்த்தனர்.
இத்தொடரின் முதல் வாரத்தில் நடந்த மூன்று போட்டிகள் 4954 கோடி நிமிடம் பார்க்கப்பட்டது சாதனை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: JioStar, IPL 2025, Billion Viewers, Star Sports, TV Ratings, Digital Concurrency